பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முத்தாலியில் நிலத்தில் இறங்கி கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சூளகிரி வட்டச் செயலாளர் முனியப்பா, தலைவர் எம்.எம்.ராஜு, பொருளாளர் சீனிவாசன், தேன்கனிக்கோட்டை வட்டச் செயலாளர் அனுமப்பா, முன்னாள் நிர்வாகி சேதுமாதவன், கிளைத் தலைவர் அப்பப்பா உட்பட கலந்து கொண்டனர்.