tamilnadu

img

எம்ஜிஆர் கல்லூரி மகளிர் தின விழா

ஓசூர், மார்ச் 4- ஓசூர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் மகளிர் தின விழா  கொண்டாடப்பட்டது. கணினி பயன்பாட்டி யல் துறைத் தலைவர் முனைவர் சிவராமன் வரவேற்றார். ஓசூர் காவல் ஆய்வாளர் சசி கலா கலந்துகொண்டு மாணவிகளிடம் காவ லன் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதைப்  பயன்படுத்தும் முறைகளைக் கூறினார்.  பெண்கள் வாழ்க்கையை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும், தற்காப்பு முறைகளை கற்றுக் கொள்வது, அதை ஆபத்தின் போது அஞ்சாமல் பயன்படுத்துவது பற்றியும், மாணவிகள் எந்த விசயத்திலும், செயலிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் கூறினார். எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முனைவர்  முத்துமணி தலைமை யேற்றார். மாணவி களிடம் உண்மையாக நடந்து கொள்பவர் கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டுமே. செயல்களில் உணர்வுகளுக்கு முதலிடம் தரா மல்  அறிவுப் பூர்வமாய் பகுத்துப் பார்த்து  விழிப்புணர்வுடனும், சமூக மாற்றத்திற்கும் உறுதுணையாகவும் இருக்க வேண்டும் என்றார். கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக மகளிர் விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்கள் வினி யோகிக்கப்பட்டது. பேச்சுப்போட்டி உட்பட,  தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்  பட்டது. மாணவிகள் முன்னேற்ற திட்ட அலு வலர் முனைவர் சத்யா ஒருங்கிணைத்தார்.