tamilnadu

img

பட்டுக்கோட்டையில் குடிநீர் ஏடிஎம்

தஞ்சாவூர் ஜூன் 23- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி குரும்பக்குளம் பகுதியில் வாட்டர் ஏ.டி.எம். எனும் தானியங்கி குடிநீர் வழங்கும் திட்டத்தினை  மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையில்  வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர்(பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு(பேராவூரணி), பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆ.ர்.காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தானியங்கி குடிநீர் ஏடிஎம் இயந்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் 1 ரூபாய்க்கும், 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் பட்டுக்கோட்டையில் முதன் முதலாக தண்ணீர் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் தண்ணீரை பொதுமக்கள் காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகியுள்ளது.