கிருஷ்ணகிரி, ஜூலை 23- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதல்வர் கே.நாகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சிவில்-அமைப்பியல், மெக்கானிக்கல்-இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி துறை பாடப்பிரிவுகள் உள்ளன. கல்வித்தகுதி முதலாமாண்டு சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், நேரடியாக இரண்டாமாண்டு சேர்க்கைக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டுக் கட்டணம் 2,157 ரூபாய். இலவச மடிக்கணினி, இலவச பேருந்து அட்டை, கல்வி உதவித்தொகை, மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக தங்கும் விடுதி வசதி உள்ளது. மேலும் விவரங்கள் பின்வரும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSesa7I3stvxUD0Ez4BzevPewFIuyjvMKKbrMBIoI-XvsdmRuA/viewform?usp=sf_link இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.