tamilnadu

img

8 ஆண்டுகளாக அரசு உதவி கிடைக்காத மாற்றுத்திறனாளி

கிருஷ்ணகிரி, ஆக. 23- கிருஷ்ணகிரி நகரில் லஷ்மண நாராயணசாமி கோவில் தெருவில் வசிப்ப வர் ஜெயராமன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் பாலாஜி. மகள் ரேணுகா. இவர்கள் சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வரு கின்றனர். ஜெயராமன் தனியார் மருத்துவமனையில் காவ லாளியாக வேலை செய்கி றார். பாலாஜி கிடைத்த வேலைகளை செய்து வருகி றார். மகள் ரேணுகா 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்த 6 மாதத்தில் உடல் நலம் பாதித்து இரண்டு கால்  களும் செயலிழந்த நிலை யில் பெற்றோருடன் வசித்து  வருகிறார். அமர்ந்து கொண்டே புளியங்கொட்டை நீக்குதல் போன்ற சிறிய வேலைகளை செய்து வருகிறார். கால்கள் செயலிழந்த போது கொடுக்கப்பட்ட மருத்துவமனை அறிக்கை யுடன் கடந்த 8 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் தனக்கு மாற்றுத்திறனாளி சான்றளித்து, உதவித் தொகை வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை வழங்க வில்லை. எனவே தன்னை வீட்டி லேயே பரிசோதித்து மாற்றுத்  திறனாளி சான்றும் உதவித்  தொகையும் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என ரேணுகா கோரிக்கை விடுத்துள்ளார்.