கொல்கத்தா:
கொல்கத்தாவில் உள்ளஜாதவ்பூர் பல்கலைக்கழகத் துக்கு வந்த மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, அங் குள்ள மாணவர்களுடன் வாக்குவாதம் நடத்திய நிலையில், மாணவர்கள், அமைச்சரின் தலைமுடியைப் பிடித்திழுத்து தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தனகர், பல்கலைக்கழகத்திற்கே வந்தபிறகே, போலீஸ் உதவியுடன் பாபுல் சுப்ரியோவை மீட்டுச் செல்ல முடிந்தது என்றும் கூறப்பட்டது.இந்நிலையில், ஜாதவ்பூர்பல்கலைக்கழக மாணவர் கள் மீது பாஜக தொண்டர் கள் துல்லியத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று மேற்குவங்க பாஜக தலைவரான திலீப் கோஷ், வன்முறையைத் தூண்டியுள்ளார்.“ஜாதவ்பூர் பல்கலைக் கழக வளாகம், தேச விரோதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளால் சூழப்பட்டுள்ளது; இங்கு முதல்முறையாக இதுபோன்று நடக்கவில்லை. எனவே, பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதக் குழுக்களைஅழிக்க நமது பாதுகாப்புப்படையினர் ‘சர்ஜிக்கல்’தாக்குதல் நடத்தியதுபோல, நமது (பாஜக) தொண்டர்களும் ‘பாலகோட்’ பாணியில், ஜாதவ்பூர் பல்கலைக் கழக மாணவர்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தி,அவர்களை முறியடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். திலீப் கோசின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.