கொல்கத்தா:
மேற்குவங்கத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்சிலையில், பாஜக கொடிகள் கட்டப்பட்டதற்கு, நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.பாஜக-வின் மேற்குவங்க மாநில துணைத்தலைவராக சந்திரகுமார் போஸ் இருக்கிறார். எனினும், தனது கட்சியினரின் செயலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்தக் கட்சியும் நேதாஜியை சொந்தமாக்க முடியாது. அவரது சிலையில் கொடியைக் கட்டிய பாஜக-வினரின் செயலை நான் கண்டிக்கிறேன்” என்று சந்திரகுமார் போஸ் கூறியுள்ளார்.மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் குறிப் பிட்ட மதத்தவரை விலக்கும் வேலைகள் நடக்கின்றன, இதுபோன்ற நிலை தொடர்ந்தால், பாஜகவில் தனது எதிர்காலம் குறித்து மறுபரிசீலனை செய் யும் சூழல் ஏற்படும் என அவர்எச்சரித்துள்ளார்.தான் 2016-ஆம் ஆண்டுபாஜகவில் சேர்ந்தபோது, மோடி, அமித்ஷா ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும், அனைவரையும் உள்ளடக்கியநேதாஜியின் மதச்சார்பற்ற சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் அரசியலில் ஈடுபடுவேன் என்று அப்போதே அவர் களிடம் நான் தெரிவித்து இருந்ததாகவும் சந்திரகுமார் போஸ்குறிப்பிட்டுள்ளார்.