tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர்கள் செத்து விழும் கொடுமை... திலீப் கோஷ் போன்ற பாஜகவினர் உண்மையில் வெட்கப்பட வேண்டும்!

கொல்கத்தா:
பீகாரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், தாய் இறந்துபோனது தெரியாமல் குழந்தை ஒன்று அவரை எழுப்பிக் கொண்டிருந்த காட்சி, அண்மையில் இணையத்தில் வீடியோவாக வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்தது.இதேபோல பல்வேறு ‘ஷ்ராமிக்’சிறப்பு ரயில்களில் பயணித்த 3 குழந்தைகள் மற்றும் 9 புலம்பெயர் தொழிலாளர்கள், பசி, தாகம், வெப்பம் தாளாமல் இறந்த சம்பவமும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.மத்திய அரசின் அலட்சியமே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர்.

அவர்களுக்கு பதிலளித்துப் பேசிய மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், “புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்களை பெரிதுபடுத்த வேண்டியதில்லை; அவை சாதாரண சம்பவங்கள்தான்.. இதற்கு முன்பு ரயில்களில் மக்கள் இறந்ததே இல்லையா.. ரயில் விபத்துக்களில் எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள்...?” என்று மிக மலினமாக பேசியிருந்தார்.இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகம்மது சலீம் கண்டனம் தெரிவித்துள்ளார். 
“பாஜக ஆட்சியில் ‘நடப்பவையெல்லாம் நல்லவைக்கே’ என்றமாய உலகத்தில் பாஜக தலைவர் இருக்க விரும்புகிறார். புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனையில் மோடிஅரசு தோல்வியைத் தழுவி விட்டது;மனித உயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. மத்திய அரசின் தோல்விக்காக பாஜக தலைவர்கள் வெட்கப்பட வேண்டுமே தவிர இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக் கக் கூடாது” என்று சாடியுள்ளார்.