கொல்கத்தா:
கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில், நாட் டிலேயே மேற்குவங்க மாநிலம்தான் முதலிடத்தில் இருக்கிறது. நாடு முழுமைக்குமான சராசரி, 100 பேருக்கு 3 பேர் என்றால், மேற்குவங்கத்தில் 100-க்கு 10 சதவிகிதம் பேர் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர்.இந்நிலையில், மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவினரும், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும், கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபடுவதற்குப் பதில், 2021க்கான தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருவதாக ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
புலம்பெயர் தொழிலாளர்களுக் கான ரயில்களை மேற்கு வங்க எல் லைக்குள் அனுமதிக்க மேற்குவங்க அரசு மறுக்கிறது என்று பாஜக தலைவர் அமித் ஷா பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மூத்தத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி, டுவிட்டர் பக்கத்தில் அளித்த பதிலில், “கொரோனா தாக்கம் உச்சத்தில்இருக்கும் இந்த சமயத்தில், பல வாரங்கள் கழித்து இன்றுதான் உள்துறை அமைச்சர் பேசி இருக்கிறார். இத்தனை நாட்கள் மௌனமாக இருந்துவிட்டு, தன் கடமைகளில் இருந்து தவறிய அமித்ஷா, இப்போது மேற்குவங்க அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, மம்தா பானர்ஜிகடந்த 10 நாட்களாக செய்தியாளர் களை சந்திக்கவில்லை என்பதை குறிப்பிட்டு, “மம்தா பானர்ஜி எங்கே?”என்று கேள்வி எழுப்பி. சமூக வலைதளங்களில் #hoyPeyecheMamata என்ற ஹேஷ்டேக்கை மேற்குவங்க பாஜகவினர் டிரெண்ட் செய்துள்ளனர்.பதிலுக்கு 2014-ஆம் ஆண்டுக்குப்பின்னர், ஒருமுறை கூட பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசாத- பிரதமர் மோடியை தலைவராக கொண்டிருக்கும் பாஜகவினர் மம்தாவைப் பற்றி பேச தகுதியில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.கொரோனா விவகாரத்தை முன் வைத்து மேற்கு வங்கத்தில் பாஜக, 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது என்று திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையனும் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார்.