கொல்கத்தா:
மாட்டுச் சிறுநீரை குடிக்கவைத்து, மனித உயிர்களுக்குஆபத்தை ஏற்படுத்த முயன்றதாக பாஜக தலைவர் ஒருவரை, கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.கொல்கத்தாவின் ஜோராசங்கோ பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் சாட்டர்ஜி. பாஜக தலைவரான இவர், திங்கட்கிழமையன்று, ‘கொரோனா தடுப்பு’ நிகழ்ச்சிஒன்றை ஏற்பாடு செய்துள் ளார். நாராயணன் சாட்டர்ஜியின் அழைப்பை ஏற்று, ஏராளமானோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து என்று மாட் டின் சிறுநீரைக் கொடுத்து, நாராணயன் சாட்டர்ஜி குடிக்க வைத்துள்ளார்.
மாட்டின் சிறுநீரைக் குடிப்பதால், கொரோனா வைரஸிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்என்று பிரச்சாரம் செய்தஅவர், சீருடைப் பணியாளரான பிந்து பிராமணிக் என்பவருக்கும் ‘தீர்த்தம்’ என்று வழங்கியுள்ளார். மாட்டுச் சிறுநீர் என்பதை அறியாமல் அவரும் வாங்கிக் குடித் துள்ளார். பின்னர், தான்ஏமாற்றப்பட்டதை உணர்ந்து,ஜோரபகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டார்.இதையடுத்து, நாராயணன் சாட்டர்ஜி மீது, 269 (சட்டவிரோதமான முறையில் உயிருக்கு ஆபத்தான நோயை பரப்புவது), 278 (உடலுக்குத் தீங்கு விளைவிப்பது), 114 (குற்றம் நிகழும்போது உடனிருந்தது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை உடனடியாக கைதும் செய்துள்ளனர்.