கொல்கத்தா:
இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த 26 பேரை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்தியா - வங்காள தேசம் எல்லை அமைந்துள்ளது. அங்குள்ள கோனா பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் செவ்வாயன்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 26 பேரை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் அவர்கள் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.