tamilnadu

வெளிமாநிலங்களில் இருந்து  வரும் தொழிலாளர்கள் கேரளத்தில் 14 நாட்கள் தனிமையில் வைக்க முடிவு

திருவனந்தபுரம், ஜுன் 23-  சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வரும் வெளிமாநில தொழிலாளர்களை 14 நாட்கள் கட்டாய தனிமையில் வைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. அவர்களை திரும்பி அழைத்து வருவோர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  கேரளத்தில் இருந்து இதுவரை 3.30 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் கோவிட் பாதிப்பு ஊரடங்கையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்களுக்கு தலா ரூ.212 வீதம் ரூ.6 கோடிக்கும் அதிகமான தொகை செலவானதாக வெளி மாநில பயணத்துக்கான சிறப்பு அதிகாரி பிஷ்வநாத் சின்ஹா தெரிவித்துள்ளார்.  சுமார் 2 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் கேரளத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கிறார்கள்.