திருவனந்தபுரம்:
மும்மொழித் திட்டத்திற்கு தான் எதிரானவன் இல்லை என்றாலும், பொதுவாக தென்னிந்தியர்களை குறிவைத்தே மும்மொழித் திட்டம் முன்மொழியப்படுவதால், அது தோல்வி அடைகிறது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார். “மூன்றாவது மொழியாக, தென்னிந்தியாவில் பலர் இந்தியைக் கற்றுக் கொண்டுள்ளனர். ஆனால்,வட இந்தியாவில் யாரும்மலையாளம் அல்லது தமிழைக் கற்றுக் கொள்வதில்லை” என்றும் சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.