tamilnadu

img

அறிவுசார் செயல்பாடுகளுக்கு இடமில்லை... வெற்றுக் கூச்சலாக மாறிப்போனது அரசியல்!

திருவனந்தபுரம்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவருமான இந்திரஜித் குப்தாவின் நூற்றாண்டையொட்டி, ‘தேர்தல் சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் கருத்தரங்கம் நடை பெற்றது.
இதில், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர்கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.அவர் தனது உரையில், “இன்றைய நாளில் அரசியல் நடவடிக்கைகள் அறிவு சார்ந்ததாக இல்லை” என்றும், “அனைத்தும் கூச்சல் சார்ந்ததாகவே உள்ளது” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “இந்த யுகத்தின் பண் பான அரசியல்வாதிகளுள் ஒருவர்” என்று இந்திரஜித் குப்தாவுக்கு புகழாரம் சூட்டியிருக்கும் செலமேஸ்வர், “அவரைப் போன்ற நாடாளுமன்றவாதிகள் இருந்த நாட்டில், இன்றைய நிலையேமுற்றிலும் மாறிவிட்டது” என்றும்,“குப்தாவைப் போன்ற அரசியல்வாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருகிறார்கள்” என்றும் கவலை தெரிவித்துள்ளார்.“ இன்றைக்கு எண்ணிக்கைதான் பெரிதாக பார்க்கப்படுகிறதே தவிர,தரம் அல்ல. இந்த நிலை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என்றும் குறிப் பிட்டுள்ளார்.இவ்வாறு செலமேஸ்வர் குறிப பிட்டுள்ளார்.தோழர் இந்திரஜித் குப்தா, கடந்த 1996 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில், எச்.டி. தேவகவுடா மற்றும் ஐ.கே. குஜ்ரால் அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக பதவி வகித் தார் என்பது குறிப்பிடத்தக்கது.