tamilnadu

விமான நிலையம் அதானிக்கு தாரைவார்ப்புக்கு எதிர்ப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது கேரள அரசு

திருவனந்தபுரம், ஆக.22- திருவனந்தபுரம் விமான நிலை யத்தை அதானி குழுமத்திடம் 50 ஆண்டு கள் குத்தகை என்கிற பெயரில் தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவு சட்டப் பூர்வமானது அல்ல என்றும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு நிர்வாக மாற்றக் கூடாது எனவும் வலியுறுத்தி உயர்நீதிமன் றத்திடம் கேரள அரசு தெரிவித்துள்ளது. அதானி குழுமத்திடம் விமான நிலை யத்தை ஒப்படைக்கும் முடிவை மாற்றி யமைக்க வேண்டும் என்று வியாழனன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் கோரி யது. முதல்வர் பினராயி விஜயன் அழைத்த இந்த கூட்டத்தில், பாஜகவைத் தவிர அனைத்து தரப்பினரும் விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதை எதிர்த்தனர். சட்டசபையிலும் இதுகுறித்த தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.