tamilnadu

img

மறுமலர்ச்சி நாயகன் ஸ்ரீ நாராயண குரு சிலை கேரள முதல்வர் பினராயி திறந்து வைத்தார்

திருவனந்தபுரம்:
மறுமலர்ச்சியின் நாயகன் ஸ்ரீ நாராயண குருவின் சிலையை முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரம் கனககுன்னு அருகே திறந்து வைத்தார்.

‘நமக்கு சாதி இல்லை’ என்கிற பிரகடனத்தின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில், ஸ்ரீ நாராயண குருவின் சிலைகேரள அரசால் அமைக்கப்பட்டது. கேரளத்தின் சமூக வரலாற்றை படிப்படியாக திசை திருப்பிய ஆசிரியர் ஸ்ரீ நாராயண குரு. குரு ஒரு சிறந்த ஆளுமை, நம் மக்களின் வாழ்க்கையை மனித சமுதாயத்திற்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு பங்களித்தவர். மறுமலர்ச்சி நாயகன் சட்டம்பி ஸ்வாமிக்கு தலைநகரில் பொருத்தமான நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.அமைச்சர்கள் ஏ.கே.பாலன், கடகம்பள்ளி சுரேந்திரன், கார்ப்பரேஷன் மேயர் ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.