tamilnadu

img

சமஸ்கிருதம் அலுவல் மொழியா? சாத்தியமே இல்லை... சசிதரூர் பேச்சு

திருவனந்தபுரம்:
சமஸ்கிருதத்தை ஒரேநாளில், நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கூறுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

பழங்குடியின மக்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் நந்த குமார் சாய், சமஸ்கிருத மொழியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையிலேயே சசி தரூர், மேற்கண்டவாறு கூறியுள்ளார்.“நந்தகுமார் சாய் கூறுவது போல, சமஸ்கிருதம் ஒரு சிறந்த மொழிதான்.

ஆனால், மிகவும் கடினமான மொழி. குறிப்பாக சமஸ்கிருதத்தை நாட்டில் யாரும் பேசுமொழியாக வைத்திருக்கவில்லை. சமஸ்கிருதத்தை ஒருநாளில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறுவது, நடைமுறைக்கு சாத்தியமற்ற செயல். சமஸ்கிருதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என நினைப்பதை வரவேற்கிறேன். அதற்காக, அம்மொழியை அலுவல் மொழியாக எல்லாம் கொண்டுவர நினைப்பது சாத்தியமில்லாதது” என்று சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.