திருவனந்தபுரம், மே 19- ஊரடங்கால் பஞ்சாப், கர்நா டகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்தி யப் பிரதேசம், குஜராத், உத்தரபிர தேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் கேரளத்திற்கு திரும்பி வர சிறப்பு ரயில்கள் இயக்கு வதற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நடந்த கோ விட் தொடர்பான ஆய்வுக் கூட்டத்து க்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மேலும் கூறியதாவது: ஒரு மாநிலத்தில் இருந்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்தோ பயணத்திற்கு 1200 பேர் தயாராக இருந்தால் சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வந் துள்ளது. ரயில் புறப்படும் மாநி லத்தில் பயணிகளின் வசதிக்காக மேலும் ஒரு நிறுத்தத்தை வழங்கு மாறு ரயில்வேயிடம் கோரியுள்ளதாக முதல்வர் கூறினார்.
ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய registernorkaroots.org தளத்திலுள்ள இணைப்பைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள லாம். அவ்வாறு முன்பதிவு செய்த வர்களுக்கு தொலைபேசி வழியாக தகவல் கிடைக்கும். இதையே கேர ளத்துக்குள் நுழைவதற்கான அனு மதியாகவும் பயன்படுத்திக்கொள்ள லாம். தில்லியில் சிக்கிய மலையா ளிகளை திரும்ப அழைத்து வருவ தற்கான சிறப்பு ரயில் வியாழக்கி ழமை புறப்படும். வெளிநாடுகளில் சிக்கிய வர்களை கேரளத்திற்கு அழைத்துவர 38 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் 6530 பேர் வர உள்ளனர். வெளிநாடுகளிலிருந்து விமானம், கப்பல் மூலம் இதுவரை 5815 பேர் கேரளம் வந்துள்ளதாக முதல்வர் கூறினார்.
29 பேருக்கு கோவிட்
கேரளத்தில் மேலும் 29 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதில் கண்ணூர் மாவட்டத்தில் ஒரு வர் சுகாதாரத்துறையை சேர்ந்தவர். திங்களன்று நோய் குணமடைந்தவர் யாரும் இல்லை. இந்த 29 பேரில் 21 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 7 பேர் வெளி மாநிலங்க ளில் இருந்து வந்தவர்கள். கண்ணு ரில் ஒருவருக்கு தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் ஒரு சுகாதார ஊழியராவார். திங்க ளன்று 127 பேர் மருத்தவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 630 பேருக்கு இதுவரை நோய தொற்று கண்ட றியப்பட்டது. இதில் 130 பேர் இப்போது சிகிச்சையில் உள்ளனர். 69730 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். இதில் 69317 பேர் வீடு களிலும், 126 பேர் மருத்துவமனை களிலும் உள்ளனர். 45905 மாதிரிகள் இதுவரை பரிசோதனைக்கு உட்ப டுத்தப்பட்டன. 44651 இல் நோய் தொற்று இல்லை என வந்துள்ளன. கேரளத்தில் தந்போது 29 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன.
மாவட்டத்திற்குள் பொதுபோக்குவரத்து
மே 31 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. தேசிய அளவில் பொருந்தக்கூடிய கட்டுப்பாடுகள் கேரளத்திலும் அமலில் இருக்கும். பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் போன்ற வை செயல்படக் கூடாது. ஆனால், ஆன்லைன் மற்றும் தொலைதூ ரக்கல்வி கூடுமானவரை ஊக்குவிக் கப்படும். மாவட்டத்திற்குள் உள்ள பொது போக்குவரத்து அனுமதிக்கப் படும். நீர்வழி போக்குவரத்து உட்பட இதுபோல் அனுமதிக்கப்படும். இருக்கைகளில் பாதி அளவு மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும். நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. மாவட் டத்தின் உள்ளே, ஹாட் ஸ்பாட்டுகள் தவிர மற்ற இடங்களில் பயணிக்க முடியும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பக்கத்து மாவட்டங்களுக்கு பயணிக்கலாம்.
அதற்கு அனுமதி தே வையில்லை, அடையாள அட்டை போதும். கோவிட் தடுப்பு மற்றும் அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப் பாடுகள் பொருந்தாது. எல்க்ட்ரீ சியன் மற்றும் இதர தொழில்நுட்ப பணியாளர்கள் தொழில் உரிம நகல்கள் கையில் வைத்திருக்க வேண்டும். அருகில் இல்லாத மற்ற மாவட்டங்களுக்கு செல்ல காவல்து றையின் அனுமதி பெற வேண்டும். வேலை நிமித்தம் வழக்கமாக நீண்ட தூரம் பயணம் செல்வோர் காவல் உயர் அதிகாரியிடமோ, மாவட்ட ஆட்சியரிடமிருந்தோ பயண அனு மதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஹாட் ஸ்பாட்டுகளில் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் பொருந்தும். ஊரடங்கால் தனித்து விடப்பட் டுள்ள உறவினர்கள், மாணவர்கள், தொழிலாளிகளை அழைத்துவரவும் அனுப்பி வைக்கவும் அனுமதி அளிக்கப்படும்.
பள்ளி வாகனங்கள், வாடகை கார்கள் உட்பட நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் மேலும் இருவர் பயணம் செய்ய லாம். குடும்பமாக மூன்று பேர் செல்ல லாம். ஆட்டோக்களில் ஒரு பயணி மட்டும் செல்ல முடியும். குடும்பமாக இருவர் பயணிக்கலாம் என முதல்வர் கூறினார்.