திருவனந்தபுரம்:
காங்கிரசின் வன்முறை அரசியலை அம்பலப்படுத்த கேரளத்தில் நடக்கவிருக்கும் வெகுஜன இயக்கத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், துணிச்சலான தியாகி அழிக்கோடன் ராகவனின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.புதனன்று சிபிஎம் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்களில் நினைவு உரைகள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்றன. வட்டர மையங்களில் கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் சத்தியாகிரகம் நடத்தினர். கண்ணூர் பையம்பலத்தில் உள்ள நினைவு மண்டபத்தில் மத்திய குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. குண்டர்களின் கத்திக்குத்துக்கு உள்ளாகி அழிக்கோடன் உயிரிழந்த திருச்சூர் செட்டியங்ஙாடியில் உள்ள நினைவு மண்டபத்தில் நடந்த நினைவு சொற்பொழிவை மாவட்ட செயலாளர் எம்.எம்.வர்கீஸ் தொடங்கி வைத்தார்.ஏ.கே.ஜி மையத்தில் மத்திய குழு உறுப்பினர் எம்.வி.கோவிந்தன் கொடி ஏற்றினார். எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் நினைவு உரை நிகழ்த்தினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை சிந்தா பதிப்பகத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.