நியூயார்க், ஜுன் 24- கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவுக்கு உலக தலைவர்களுக்கு இணையான ஐக்கிய நாடுகள் சபையின் பொது சேவை தின கௌரவம் கிடைத்துள்ளது. கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் பொது செயல் பாட்டாளர்களின் பங்கு என்கிற பொருளில் நடந்த குழு விவாதத்தில் நியூயார்க் ஆளுநர், தென்கொரிய அமைச்சர் உள்ளிட்டோருடன் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவும் பங்கேற்றார். இந்த குழு விவாதத்தில் உலகம் முழுவதுமிருந்தும் ஆறு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவிலி்ருந்து கே.கே.சைலஜாவுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்தது.
செவ்வாயன்று உலக பொதுச் சேவை தினமாகும். அதன் ஒரு பகுதியாக கோவிட்டுக்கு எதிரான முன்னணி போராளி யாக செயல்படுவோருக்கு ஐக்கிய நாடுகள் சபை இந்த கௌ ரவத்தை அளித்தது. கோவிட் 19-க்கு எதிராக சிறந்த சேவை புரிந்தவர்களை பாராட்டும் வகையில் ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் தலைமையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செவ்வாயன்று மாலை ஆன்லைனில் நடந்த இந்த குழு விவாதத்தில் கேரளத்தில் நடந்துவரும் கோவிட் எதிர்ப்பு போராட்டம் குறித்து கே.கே.சைலஜா உரையாற்றினார்.