tamilnadu

img

கேரளா சாதனையின் பின்னுள்ள வரலாறு

ஒரே நாளில் 30 ஆயிரம் மாணவர்கள் கேரளத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சாதனை கேரளத்துக்கு மட்டுமே உரித்தானது. ஏனென்றால் அதற்கான வேரை, 1957ஆம் ஆண்டு கேரளத்தில் ஆட்சிக்கு வந்த தோழர் இ.எம்.எஸ். தலைமையிலான இடது முன்னணி அரசிடமிருந்து பார்க்க வேண்டும். 


‘முதல் கல்வி உரிமை சட்டத்தை’, அதன் உண்மையான அர்த்தத்தில் 1957ஆம் ஆண்டிலேயே இடது முன்னணிஅரசு கொண்டுவந்தது. அச்சட்டத்தில் பெற்றோர், பாதுகாவலர் கடமைகளில் ஒன்றாக, ‘குழந்தை பள்ளிக்குச் செல்வதைதடுக்கக் கூடாது’ என்றிருந்தது. அரசுதிறக்கும் கல்விக் கூடங்கள் மாணவர்களுக்கு கல்வி கொடுப்பதாக கம்யூனிஸ்ட் அரசின் செயல்பாடு இருந்தது. இந்தத்தாக்கத்தின் விளைவாகவே தமிழகத்திலும் மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி போன்றவை உருவாயின.  


கேரளத்தில் தொடர்ந்து அரசுகள்மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும், அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வலுவிழக்கவில்லை, மாறாத பலப்படுத்தப்பட்டது. கேரளக் கல்விஅமைச்சராக எம்.ஏ. பேபிபொறுப்பேற்றிருந்தபோது தற்காலச்சூழலுக்கு ஏற்றாற்போல் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இப்போது பதவியில் உள்ள இடதுமுன்னணி அரசும் அரசுப் ள்ளிகளின் வளர்ச்சியில் திட்டமிட்டு கவனம் செலுத்திவருகிறது. மக்களுக்கு அரசுப் பள்ளிகள் மீதான மதிப்பை உணர்த்துவதில் குறிப்பிடத்தகுந்த வேலைகள், அங்கு நடைபெற்றுவருகின்றன.உதாரணத்துக்கு, கேரளத்தில் பள்ளிஆண்டு விழாவின்போது மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமின்றி அப்பள்ளியை சுற்றியுள்ள பொதுமக்களும் வரவேற்கப்படுகின்றனர். வகுப்புவாரியாக மாணவர்கள் அரங்கு அமைத்து ‘சவாலை எதிர்கொள்ளும்’ நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.


அதன்படி அந்தந்த வயதுக்குரியமாணவர்களுக்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் வாசிக்க, எழுத சவால் விடுக்கலாம். அதையேற்று மாணவர்கள் செயல்படுத்திக் காட்டுவார்கள். இதன்மூலம் பொதுமக்களுக்கு அரசுப் பள்ளிகளின் மீதான மதிப்பை உயர்த்துவது மட்டுமின்றிஅவர்களுக்கு அது நம் பள்ளி என்ற உணர்வும் ஊட்டப்படுகிறது.

-பிரின்ஸ் கஜேந்திர பாபு