திருவனந்தபுரம், மார்ச் 5- ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிட்ட ராமன் ஓட்டிவந்த கார் மோதி உயிரிழந்த செய்தியாளர் கே.எம்.பஷீரின் மனைவி ஜஸீலாவுக்கு மலையாளம் பல்கலைக் கழ கத்தில் வேலை வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிராஜ் என்கிற மலையாள நாளிழின் திருவனந்தபுரம் பதிப்பின் தலைமை செய்தி யாளர் கே.எம்.பஷீர். இவர் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரவு ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிட்டராமன் ஓட்டிவந்த கார் மோதி உயிரிழந்தார். பஷீரின் மனைவி ஜஸீலா பிகாம் பட்டதாரி. இவரது தகுதிக்கேற்ற பணி வழங்க கேரள அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி அவரது கல்வித்தகுதி யை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அர சுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்ப டையில் உதவியாளர் பணி வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஷீர் உயிரிழக்க காரணமான விபத்தை ஏற்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கிட்டராமன் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதை ரத்து செய்து மீண்டும் பணி வழங்குமாறு தலைமை செயலாளர் தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதை முதல்வர் பினராயி விஜயன் நிராகரித்தார். ஸ்ரீராம் வெங்கிட்டராமன் போதையில் கார் ஓட்டியதே அந்த விபத்துக்கு காரணம் என காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.