திருவனந்தபுரம்:
கேரளத்தில் அனைத்து முந்திரி ஆலைத் தொழி லாளர்களுக்கும் ஈஎஸ்ஐ வசதியும் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 200 வேலை நாட்களும் வழங்கப்படும் என அமைச்சர்மேர்சிக்குட்டியம்மா தெரிவித்தார். கேரள முந்திரி வளர்ச்சிக்கழகத்தின்கீழ் கிளிமானூரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முந்திரி பருப்பு விற்பனை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் தொழிலாளர்களுக்கு ஓணத்திற்கு உரிய போனஸ் கிடைக்க நிதி அமைச்சருடன் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். முந்திரி கழக தலைவர் எஸ்.ஜெயமோகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.