tamilnadu

img

கேரளாவில் கொரோனா சிறப்பு மருத்துவமனை திறப்பு…

திருவனந்தபுரம்
கேரள மாநிலம் காசர்கோட்டில் 5 ஏக்கர் நிலப்பரப்பில், 80 ஆயிரம் சதுர அடியில் 5 மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கென சிறப்பு மருத்துவமனை காட்டும் பணி தொடங்கியது. ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையின் இறுதிக்கட்ட பணி கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன், வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து மருத்துவசேவையை தொடங்கி வைத்தார்.

டாடா குழுமம் சார்பில் கட்டப்பட்ட இந்த பிரத்யேக மருத்துவமனையில் மொத்தம் 551 படுக்கைகள் மற்றும் 36 வென்டிலேட்டர்கள் கொண்ட படுக்கைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.