திருவனந்தபுரம், ஜுலை 14- கேரளத்தில் திங்களன்று 449 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப் பட்டது. தொடர்ந்து மூன்றா வது நாளாக நோயாளிகள் எண்ணிக்கை 400ஐ கடந்துள் ளது. தொடர்பு மூலம் 144 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. திங்களன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கோவிட் ஆய்வுக்கூட்டத்தி ற்கு பிறகு செய்தியாளர்க ளிடம் மேலும் கூறியதாவது: ஞாயிறன்று நோய் தொற்று ஏற்பட்டதில் 140 பேர் வெளி நாடுகளில் இருந்தும் 64 பேர் இதர மாநிலங்களில் இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். 18 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்ட இடம் தெரியவில்லை. 162 பேர் குணமடைந்தனர். திங்க ளன்று கொல்லம் மாவட்டத் தில் 75 வயதான தியாகரா ஜன், கண்ணூர் மாவட்டத்தில் 64 வயதான ஆயிஷா ஆகி யோர் கோவிட்டுக்கு பலி யாகினர். திங்களன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 12,230 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 1,80,594 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 4376 பேர் மருத்துவமனைகளில் உள்ள னர். திங்களன்று 713 பேர் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டனர். இது ஒரே நாளின் அதிக எண்ணிக்கை யாகும்.