திருவனந்தபுரம், ஆக. 4- கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் கொண்டாட்டங்களுக்கு கேரள அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் 3500 ஓணச்சந்தைகள் என்கிற பெயரில் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க கண்காட்சி மற்றும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் ஒன்று முதல் பத்து வரை 14 மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்ப ட்டுள்ள முக்கிய இடங்களில் இந்த கண்கா ட்சிகள் நடத்தப்பட உள்ளன. முதல்வர் பின ராயி விஜயன் தலைமையில் நடந்த தயா ரிப்பு கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்ய ப்பட்டுள்ளது. ‘சப்ளைகோ’ வின் விற்ப னை நிலையங்கள் மூலம் தற்போது கிடைத்து வரும் பொருட்கள் மட்டுமல்லாது ஹார்டி கார்ப், வி.எப்.பி.சி.கே, ஹான்டெக்ஸ், ஹான்வியூ, மத்ஸ்யபெட், இந்தியாவின் இறைச்சி தயாரிப்பு நிறுவனம், கோய ர்பெட், வனஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு துறை களின் தயாரிப்புகளும் கண்காட்சிகளில் கிடை க்கும். தாலுகா மையங்களில் தனியாகவோ முக்கிய சப்ளைகோ விற்பனை நிலை யங்களுடன் இணைந்தோ இந்த கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட, தாலுகா அளவிலான கண்காட்சிகளில் காய்கறிகள் விற்பனைக்காக தனி ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன. கன்ஸ்யூமர்பெட் 3500 மையங்களில் ஓணச் சந்தைகள் நடத்தும். 200 திரிவேணி அங்காடிகளும் 3300 கூட்டுறவு சந்தை மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்படும். பக்ரீத் சந்தைகள் செப்டம்பர் 7 முதல் 12 வரையும் ஓணச்சந்தை செப்டம்பர் 1 முதல் 10 ஆம் தேதி வரையிலும் நடைபெறும். வேளாண்துறையும் ஹோர்ட்டிகோர்பும் இணைந்து 2000 ஓணச்சந்தைகள் நடத்த உள்ளன. விவசாயிகளிடமிருந்து 10 சதவி கிதம் கூடுதல் விலைக்கு காய்கறிகள் வாங்கி பொதுமக்களுக்கு சந்தை விலையைவிட 10 முதல் 20 சதவிகிதம் குறைவாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் அமைச்சர்கள் தாமஸ் ஐசக், கடகம்பள்ளி சுரேந்திரன், வி.எஸ்.சுனில் குமார், பி.நிலோத்தமன் மற்றும் உயர் அதி காரிகள் பங்கேற்றனர்.