tamilnadu

img

கேரளச் செய்திகள்: மாவட்டத்திற்கு 3 கோவிட் மருத்துவமனைகள் பரிசோதனையும், சிகிச்சையும் அதிகரிக்கப்படும்: முதல்வர்

திருவனந்தபுரம், ஜூலை 11- கேரளத்தில் நோய்க்கான வாய்ப்பு  அதிகரித்துள்ளதாக கருதி பரிசோதனை யும் சிகிச்சையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 மருத்துவமனைகளும், சாதாரண நிலையில் உள்ள  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க துவக்கநிலை கோவிட் சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள் ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். வெள்ளியன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:  நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்தால் தனியார் துறையின் ஒத்துழைப்பு பெறப்படும். அதற்கான திட்டம்ஏ,பி,சி தயாரிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மகாநக ரங்கள் அனைத்தும் கோவிட் கொள்ளை நோயிடம் சரணடைந்தன. தாக்குப்பிடித்து நின்ற பெங்களூரு கூட தடுமாறுகிறது. கடந்த நாட்களில் ஆயிரத்துக்கும் அதிக மான நோயாளிகள் அந்த நகரத்தில் கண்ட றியப்பட்டனர்.

சென்னையின் நிலை அதைவிட மோசம். கேரளத்தில் நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் இங்கெல்லாம் நோய் பரவத் தொடங்கியது என்பதை நினைவுகூர வேண்டும். இங்கெல்லாம் ஏதேனும் இடத்தை மையமாக கொண்டு கிளஸ்டர் உருவாகும். பின்னர் அவை இரட்டிப்பாகும். அதன்பிறகு சமூகப் பரவல் ஏற்படும்.  அதுபோன்ற சூழ்நிலைதான் இங்கு கண்டறியப்பட்ட ‘சூப்பர் ஸ்ப்ரெட்’. கவ னிக்காமல் விட்டால் நோய் பற்றிப் படரும்.  அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட கேரளத்தில், பரவுவதற்கு அதிக நேரம் தேவையில்லை. நாம் ஒரு மகா பேரழிவை எதிர்கொள்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மார்ச் 24இல் ஊரடங்கு அறிவித்தபோது இந்தியாவில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை ஐநூறுக்கும் குறைவு. மரணம் 9 மட்டும். இன்று நோயாளிகளின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது. 21,604 பேர் இறந்துவிட்டனர். நாம் நெருங்கி வந்துள்ள நெருக்கடியின் ஆழம் எத்தகையது என்பதை இந்த புள்ளி விவரங்கள் கூறும் என முதல்வர் தெரிவித்தார்.

416 பேருக்கு கொரோனா பாதிப்பு  


கேரளத்தில் புதிய உச்சமாக வெள்ளியன்று 416 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. முதன்முறையாக நோயாளிகள் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவாக 204 ஆக அதிகரித்தது. வெளியிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கையைவிட தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் முதன்முறையாக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 123, இதர மாநிலங்களில் இருந்து  வந்தவர்கள் 51 பேர் என முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறினார்.      வெள்ளியன்று 112 குணமடைந்தனர். அன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 11,693 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.  இதுவரை மொத்தம் 2,76,878 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 4528 மாதிரிகளின் முடிவுகள் நிலுவையில் உள்ளன.

வெளியிலிருந்து கேரளத்திற்கு  இதுவரை திரும்பி வந்தவர்கள் 5,31,330  பேர். வெளிநாடுகளிலிருந்து 1,98,026 பேரும், வெளி மாநிலங்களிலிருநது 3,33,304 பேரும் வந்துள்ளனர். ஜாக்ரதா போர்ட்டலில் பதிவு செய்யாமல் வருகிறவர்களை தனிமைக்கு அனுப்புவதில் இடையூறு ஏற்படுவதாக முதல்வர் கூறினார். எல்லைகளில் தீவிர பரிசோதனை  நடத்தப்படும். கடற்கரைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். கிளஸ்ட்டர்களில் விரிவான விழிப்புணர்வை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வார்டு குழுக்களுடன் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்பார்கள் என முதல்வர் தெரிவித்தார்.