திருவனந்தபுரம், ஜூலை 15- தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுடன் தொ டர்பு உள்ளதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் கேரள தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் செயலாளர் எம்.சிவசங்க ரனிடம் என்ஐஏ அதிகாரிகள் சுமார் பத்து மணி நேரம் விசாரணை நடத்தினர். சுங்கத்துறை அதிகாரிகள் செவ்வாயன்று பூஜப்புரயில் உள்ள சிவசங்கரனின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணைக்குஆஜராகு மாறு கேட்டுக்கொண்டனர். சற்று நேரத்தில் வீட்டின் அருகில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். தங்க கடத்தலுக்கு ஏதேனும் உதவி செய்யப்பட்டுள்ளதா, சதி ஆலோசனைகளில் பங்கு உள்ளதா, குற்றவாளிகளோடு உள்ள தொடர்பு என்ன போன்ற கேள்விகளை சுகா தாரத்துறை எழுப்பி உள்ளது. சுங்கத்துறை உதவி ஆணையர் கே. ராமமூர்த்தி தலைமையிலான குழு வினர் சிவசங்கரனின் வாக்குமூலம் பெற்றனர்.