tamilnadu

img

தங்க கடத்தலில் என்ஐஏ விசாரணை

கேரள முதல்வர் வரவேற்பு

திருவனந்தபுரம், ஜூலை 11- தங்க கடத்தல் வழக்கை என்ஐஏ விசாரணைக்கு உட்படுத்திய மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்பதாக கேரள முதல்வர் பின ராயி விஜயன் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில ளித்து அவர் மேலும் கூறியதாவது: என்ஐஏ விசாரணையை துவக்கி விட்ட தாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களது நடவடிக்கை தொடரட்டும். என்ஐஏ திறம்பட விசாரிப்பதற்கு உரிய முகமைதான். என்ஐஏ போதாது சிபிஐ வேண்டும் என எப்படி கூற முடியும். தங்க கடத்தல் குற்றவாளி களை கண்டறியட்டும். நாட்டின் பொருளாதார நிலையை தகர்ப்ப தற்கான நகர்வுதான் நடக்கிறது. இதற்கு முன்பு நடந்த தங்க கடத்த லையும் விசாரிப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. விசாரணை யாரிட மெல்லாம் எட்டுமோ என்கிற பதற்றம் பலருக்கும் இருக்கும். அப்படிப் பட்டவர்கள்தான் அரசுக்கு எதிராக பிரச்சாரம் நடத்துகிறார்கள். கேரள அரசுக்கு இந்த பிரச்சனையில் செய்வதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.