tamilnadu

img

பரணி பார்க் கல்விக் குழுமத்தில்  வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

 கரூர், செப்.24- பரணி பார்க் கல்விக் குழுமத்தில் இந்திய தேர்தல் ஆணைய வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்வி குழும தாளாளர் ஷி.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.  கரூர் கோட்டாட்சியர் சந்தியா வழிகாட்டுதலின் படி, கரூர் தேர்தல் தனி துணை வட்டாட்சியர் முருகன் பேசினார். கல்வி குழும முதன்மை முதல்வரும், இந்திய அரசின் பாது காப்பு அமைச்சக தேசிய ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினருமாகிய முனைவர் சி.ராமசுப்பிரமணியன் கருத்துரையாற்றினார். எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி வாழ்த்துரை வழங்கி னார். பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர் வரவேற்புரை வழங்கினார். பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி நன்றி யுரை வழங்கினார்.  முகாமில் பரணி பார்க் கல்வி குழும ஆசிரியர்கள், எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரியின் பயிற்சி ஆசிரி யர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.