tamilnadu

img

தனியார் குடிநீர் விற்பனை நிலையத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு நிரந்தரமாக மூட மக்கள் கோரிக்கை

குளித்தலை, பிப்.17- கரூர் மாவட்டம் குளித்தலை நக ராட்சி பெரியார் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் காவிரி குடிநீர் இணைப்பு இதுவரை வழங்கவில்லை. ஆனால் இந்தப் பகுதியில் தற்போது குடிநீர் உறிஞ்சி விற்கும் விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து நடந்த கூட்டத்தில் பெரியார் நகர், நேதாஜி நற்பணி மன்றம் ஏசிடி நகர் சக்தி நகர் மற்றும் பெரிய பாலம் மக்கள் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் பெரியார் நகரில் உள்ள தனியார் குடிநீர் உறிஞ்சி விற் பனை நிலையத்தை நிரந்தரமாக மூட வும் பெரியார் நகர் நிலத்தடி நீர் மட்டத்தை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்டவை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு உரிய தீர்வு காண வலி யுறுத்துவது என முடிவு செய்யப் பட்டது.