கரூர், ஜூலை 17- கரூர் பரணி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் இந்தியா - ஜப்பான் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் ஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் ஹயாத்தோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் துவக்க வகுப்புகளில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கி டையே உள்ள கல்விமுறையை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஜப்பான் பள்ளிகளை ஒப்பி டும்போது இந்திய பள்ளியில் குழந்தைகளுக்கு எழுதும் வேலை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய குழந்தை கள் மகிழ்வாக கல்வி கற்கிறார்கள். இந்திய மண்ணில் பிறந்த குழந்தைகளாகிய நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட வர்கள் என்று கூறினார். மேலும் அவர்களுடைய கலாச்சாரத்தை விளக்கும் வகையில் ஜப்பான் பாடலை பாடி, ஜப்பானிய முறை யான “கெண்டோ” சிலம்பம் சுற்றினார். பரணி வித்யாலயா மாணவர்கள் நமது கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகை யில் பரதநாட்டியம், கிராமிய நடனம், சிலம்பம், தப்பாட்டம் ஆடினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் எஸ்.மோகன ரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், பள்ளி யின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷினி, ஜப்பானிய மொழி பயிற்றுநர் தமிழ் ஆகியோர் கலந்து கொண்ட னர். பள்ளியின் முதல்வர் எஸ்.சுதாதேவி வரவேற்புரை யாற்றினார். துணை முதல்வர் ஆர்.பிரியா நன்றியுரை யாற்றினார்.