tamilnadu

ஊதியம் கோரி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூலை 14- கரூர் மாவட்டம் க.பரமத்தி - அரவக்குறிச்சி கூட்டுக் குடி நீர்த் திட்டம், கொசூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பிள்ளாப்பா ளையம் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றில் பணிபுரியக் கூடிய ஒப்பந்த ஊழியர்களுக்கு, உரிய ஊதியத்தை வழங்க மறுக்கும்  ஒப்பந்ததாரர்கள் ஊதியம் வழங்கிட வேண்டும். ஒப்பந்ததா ரர்கள் ஊதியம் வழங்காமல் இருப்பதை வேடிக்கை பார்க்கும்  வாரிய நிர்வாகத்தை கண்டித்தும், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊழியர்களை பட்டினிக்கு தள்ளும் நிலையை கை விட்டு, ஊதியம் வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கரூர் கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன்பு கரூர்  மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தின்  (சிஐடியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.முருகேசன் தலைமை  வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.