கரூர், ஆக.12- புதிய கல்விக் கொள்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட காவல் காரன்பட்டி கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடைவீதியில் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு என்.அய்யர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இலக்கு வன், தோகைமலை ஒன்றிய செய லாளர் கே.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முனியப்பன், ரெத்தினம், வடிவேல், பாலு, ஆறு முகம், செல்வராஜ், சுப்பிரமணி, நட ராஜான் உள்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.