districts

img

வீட்டு வரி, சொத்து வரி உயர்வு ரத்து கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.1- திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி யில் முறையில்லா வீட்டு வரி, சொத்து வரி  உயர்வை ரத்து செய்ய வேண்டும், நக ராட்சி முழுவதும் நடைபெறும் நில ஆக்கிர மிப்புகளை தடுக்க வேண்டும், மக்களை  அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி  தெரியும் நாய்கள் மற்றும் மாடுகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும், அய்  யம்பட்டி சாலையை இருபுறமும் அக லப்படுத்தி போக்குவரத்து நெருக்கடியை குறைக்க வேண்டும், குடிநீர் குழாய் உடைப்பு என்று வாரக்கணக்கில் தண்ணீர்  விடாமல் இருப்பதை கைவிட்டு தினமும் ஒரு வேளை தண்ணீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் துவாக்குடி மலை கிளை சார்பில் அண்ணா வளைவு அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாக் குழு  உறுப்பினர் அமீர் தலைமை வகித்தார். புற நகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், தாலுகா செயலாளர் மல்லிகா, மாவட்டக்  குழு உறுப்பினர் தெய்வ நீதி மற்றும் தாலு காக்குழு உறுப்பினர்கள், துவாக்குடி மலை  கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.