சண்டிகர்:
உளுத்துப்போன உளுந்தம் பருப்பை, மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பி பஞ்சாப் மாநில அரசு பதிலடிகொடுத்துள்ளது.
கொரோனா கால நிவாரணமாக, மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் உணவு தானியங்களை வழங்கி வருகின்றது. இந்த தானியங்கள் அந்தந்த மாநில அரசுகளால் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 1.4 கோடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் தானியத்தில், 45 டன் உளுத்துப்போன உளுந்தம் பருப்பை, மத்திய அரசுக்கே, பஞ்சாப் அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் வழங்கப்பட்ட உளுந்தம் பருப்பு, மிகவும் மோசமாக இருந்ததாகபொதுமக்கள் புகார் எழுப்பிய நிலையில், அதனை மாநில அரசு அதிகாரியான கிரிஷ் டியலன் சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது, அந்த பருப்புதுர் நாற்றத்துடன் பூசனம் பிடித்து பறவைகளின் எச்சத்துடன் இருந்துள்ளது.உடனடியாக பருப்பு விநியோகத்தை நிறுத்திய டியலன், இந்த பருப்புமனிதர்கள் சாப்பிட லாயக்கற்றவை எனப் பஞ்சாப் உணவு வழங்கல் துறைஇயக்குநருக்குப் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்தே, உளுத்துப் போன உளுந்தம் பருப்பை, மத்திய அரசுக்கே பஞ்சாப் அரசு திருப்பி அனுப்பியுள்ளது. பஞ்சாப் அரசு கேட்ட உணவு தானியத்தில் 1 சதவிகிதத்தைத்தான் மத்தியஅரசு வழங்கியுள்ளது. ஆனால், அதையும் உளுத்து ஒன்றுக்கும் உதவாத வகையில் அனுப்பி மக்களை வஞ்சித்துவிட்டதாக பஞ்சாப் அரசு குற்றம் சாட்டியுள்ளது.