பெய்ஜிங்
சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கும் புதுவகை வைரஸான கொரொனா வைரஸ் தற்போது ஆசிய கண்டதை மட்டுமின்றி உலகையே நடுங்க வைத்து வருகிறது.
நாளொன்றுக்கு 40 பேர் விதம் இதுவரை 350-க்கும் அதிகமானோர் கொரோனா தாக்குதலால் பலியாகியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசரநிலையை அறிவித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.
கொரொனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரில் 2 புதிய மருத்துவமனை கட்ட சீன அரசு திட்டமிடப்பட்டிருந்தது. இதில் ஒரு மருத்துவமனை 269,000 சதுர அடி கொண்ட தற்போது செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த சிறப்பு மருத்துவமனை வெறும் 9 நாட்களில் கட்டி சீன அரசு புதிய வரலாறு படைத்துள்ளது.
பொதுவாக இம்மாதிரியான மருத்துவமனைகளை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் வரை தேவைப்படும். சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் அரும்பாடுபட்டு இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளனர். 1000 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் திங்கள் முதல் நோயாளிகள் சிகிச்சை பெறுவார்கள் என சீன அரசு அறிவித்துள்ளது. இந்த மருத்துவமனையானது சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ் செயல்பட உள்ளது. 24 மாதம் செய்யக்கூடிய வெறும் 243 மணிநேரத்தில் (9 நாட்கள்) கட்டி முடித்த சீனாவின் செயலை உலக நாடுகள் கண்டு வாயடைத்து போயுள்ளனர்.