கவுகாத்தி:
அசாமைச் சேர்ந்த நூர் பேகம் என்பவரின் குடியுரிமைப் பறிப்பை, கவுகாத்திஉயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.தான், இந்தியக் குடிமகள்தான் என்பதைநிரூபிக்க நூர் பேகம் 8 ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால்,அந்த ஆவணங்கள் போதுமானது அல்லஎன்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.கிழக்கு அசாமின் கோலாகட் மாவட்டத்தில் உள்ள ஹபிகான் என்ற ஊரைச் சேர்ந்தவர், நூர்பேகம். 1986-இல் பிறந்தஇவர், என்ஆர்சி பட்டியலில் தனதுபெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குடியுரிமையை நிரூபிக்க, பள்ளி மாற்றுச்சான்றிதழ் உட்பட 8 ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தார். 1997 ஆம்ஆண்டு வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் சேர்க்கப்பட்ட நிலையில்,அதனையும் ஆதாரமாக அளித்திருந் தார். தந்தை பெயர் ராஜூ ஹூசைன், தாயார் பெயர் ஜஹோரன் ஹூசைன், தாத்தா பெயர் ஜேனுராத்தின் என்ற தகவல்களையும் தெரிவித்திருந்தார்.ஆனால், நூர்பேகம் அளித்த இந்த 8 ஆவணங்களையும் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் மனோஜித் பூயான், பார்த்திவ் ஜோதிசைக்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.தனது வம்சாவளி மூதாதையர், மார்ச்25, 1971-ஆம் ஆண்டிற்கு முன்னால் அசாமில் வசித்தார்கள் என்பதையோ, அவர்களுடன் தனக்கு இருக்கும் தொடர்பையோ நூர்பேகம் நிரூபிக்கத் தவறி விட்டார் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.