பெங்களூரு:
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கடந்த 23-ஆம் தேதி பதவி இழந்தது. இதையடுத்து பாஜக தலைவர் எடியூரப்பா கடந்த 26-ம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவருடன் அப்போதைக்கு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
எனினும், அடுத்த ஓரிரு நாளில் அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடியூரப்பா ஆட்சி அமைத்து ஒரு வாரம்கடந்தும், இன்னும் அமைச்சரவை பதவியேற்பு நடைபெறவில்லை. இந்நிலையில்தான், அமைச்சர் பதவிக்கு பாஜகவுக்குள் அடிபிடி நடப்பதாகவும், 60 பேர் வரை, அமைச்சர் பதவிகேட்டு மல்லுக்கட்டுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறிப்பாக, பிராமணர், லிங்காயத்து, ஒக்கலிகா என சாதி வாரியாக அணிதிரண்டுள்ள எம்எல்ஏ-க்கள் தங்களுக்குநெருக்கமான மேலிடத் தலைவர்கள் மூலம் அமைச்சர் பதவியை கைப்பற்றகாய்நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர வட கர்நாடகா, மைசூரு மாகாணம், மலநாடு, ஹைதராபாத் கர்நாடகாஎன மாகாண ரீதியாகவும் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது.இவை போதாதென்று, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள்துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பா, அசோக், மூத்தத் தலைவர்கள் பசவராஜ் பொம்மை, மாதுசாமி, போப்பையா, ஸ்ரீராமலு உள்ளிட்டோர் தங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க கேட்டும்அடம்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.இதன் காரணமாகவே, அமைச்சர் பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது, யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது, என்று தெரியாமல் எடியூரப்பா குழம்பிப் போயிருக்கிறார் என்றுபாஜகவினர் கூறியுள்ளனர்.