நாகர்கோவில், ஜூன் 18- கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் காவலர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 18 ஆயிரம் மற்றும் வார விடுமுறை வழங்க வலி யுறுத்தி செவ்வாயன்று கன்னி யாகுமரி மாவட்ட பொது த்தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு, கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் காவலர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் காவ லருக்கு மாதம் ரூபாய் 9 ஆயி ரத்து 100ம், தூய்மை பணியா ளருக்கு மாதம் ரூபாய் 3 ஆயி ரமும் வழங்கப்பட்டு வரு கிறது. கோவிட் -19 காலத்தில் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்துடன் பணியாற்றி வரு கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் தொழிலாளர்கள் ஊதிய விஷயத்தில் தலை யிட்டு குறைந்தபட்ச ஊதிய மாக மாதம் 18 ஆயிரம் ரூபாய் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிலாளர்கள் மாதம் 30 நாட்களும் ஓய்வின்றி பணி செய்து வரும் நிலையில் அவர்களுக்கு வாரவிடு முறை கிடைத்திடவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை மாவட்ட தலைவர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் ஜாண் சௌந்தர்ராஜ், நிர்வாகிகள் சித்ரா, மகாதேவன், சிஐடியு மாவட்ட நிர்வாகி எஸ்.அந்தோணி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.