tamilnadu

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள்   அமைச்சர் துவங்கி வைத்தார்

நாகர்கோவில், அக்.6- நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் ரூபாய் 21 கோடியே 30 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதி கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதில், ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் தாய் சேய் அவசர சிகிச்சை கட்டிடம், ரூபாய் 2 கோடியே 54 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கூடுதல் நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை ஞாயிறன்று நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். சுகாதாரத்துறை அமை ச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறு கையில், தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது. கேரளா, தெலுங்கானா மாநிலங் களை ஒப்பிடும்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நோயாளிகள் மிகவும் குறைவு. நோய் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை, தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம். அங்கும் நோய்த்தடுப்பு சிகிச்சை முறைகள் சிறப்பான முறையில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் டெங்குவினால் உயிரிழப்பு இல் லாத நிலை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் 70 சதவீத பிரசவம் தனியார் மருத்துவமனை களில் நடைபெறுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் 70 சத வீத பிரசவம் அரசு மருத்துவமனை களிலும், 30 சதவீத பிரசவம் தனி யார் மருத்துவமனைகளிலும் நடக்கி றது. அரசு மருத்துவர்களின் பல் வேறு கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. மருத்து வக்கவுன்சிலின் விதிமுறைகளை பின்பற்றியே அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப்பட்டு வரு கிறது. இதன்மூலம் தமிழகத்தில் 360 எம்.பி.பி.எஸ்.சீட்டுகளும், 508 மருத்துவமேல்படிப்பு சீட்டுகளும் அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வு துறை இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை களை நிறைவேற்றுவதற்காக, இன்று ஆசாரிப்பள்ளத்தில் இரு தய சிகிச்சை பிரிவுக்காக ரூபாய் 3 கோடியே 60 லட்சம் செலவில் கேத் லேப் வசதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மாரடைப்பு யாருக்காவது வரும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக, அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறும் வசதிமுதல்முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏழை எளிய மக்கள் முற்றி லும் கட்டணமில்லாமல் இலவச மாக இருதய சிகிச்சை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. தாய் சேய் இறப்பு விகிதம் இல்லாத நிலையை உருவாக்குவ தற்காக தமிழ்நாட்டில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அதில், ஒரு முக்கிய பங்காக, ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் தாய் சேய் அவசர சிகிச்சை கட்டிடம் கட்டப்படவுள்ளது. மேலும், மன நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைக்கான மின் அதிர்வு சிகிச்சைக்காக ரூபாய் 3 லட்சம் செலவில் ஒரு புதிய கருவியை தொடங்கி வைத்திருக்கிறோம். அதேபோல், ரூபாய் 2 கோடியே 54 லட்சத்து 10 ஆயிரம் மதிப் பீட்டில் கூடுதல் நூலக கட்டிடத்திற் கான பூமி பூஜையும் தொடங்கப் பட்டுள்ளது. ரூபாய் 1 கோடியே 17 லட்சத்தில் 10 வென்டிலேட்டர், 10 மல்டி பாரா மீட்டர், 20 மானிட்டர் வழங்கப்பட்டு பொதுமக்களுக்காக அர்ப்பணிக் கப்பட்டுள்ளது. விபத்துக்கான சிகிச்சை மையத்தில் ரூபாய் 40 லட்சம் செலவில் மேம்படுத்தப் பட்ட முற்றிலும் குளிர்சாதன வசதி களுடன் கூடிய நவீன விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஆகியவை எல்லா அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்காக தொடங்கப் படும் காரணத்தால், சாலை விபத்து களில் ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என அவர் கூறி னார். இதைத் தொடர்ந்து, ஆசா ரிப்பள்ளம் அரசு மருத்துவமனை யில் கிட்னி மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டு, அந்த நோயாளி பூரண குணமடைந்துள்ளதை பாரா ட்டும் வகையில், அந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினர்களுக்கு அமைச்சர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி னார். மேலும், காது கேளாதோர், வாய் பேச இயலாத குழந்தை களுக்கு அறுவைச் சிகிச்சை மற்றும் பேச்சு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரையும், பாராட்டியதோடு, சிகிச்சை பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மேற்கொண்டு தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி னார். இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், சட்டப் பேரவை உறுப்பினர்கள் என்.சுரேஷ்ராஜன் ஆஸ்டின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். ஸ்ரீநாத், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் இரா.பாலாஜி நாதன், அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஒய்.அருள்பிரகாஷ், துணை முதல்வர் பி.லியோ டேவிட், உறை விட மருத்துவ அலுவலர் எஸ்.ஆறு முகவேலன், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.