tamilnadu

img

45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் துவங்கியது விசைப்படகுகளை கரை ஒதுக்கும் பணியில் மீனவர்கள்

குழித்துறை, ஜூன் 18- கன்னியாகுமரி மாவட்டத்தின் அர பிக்கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெ ருக்க காலத்தை  முன்னிட்டு 45 நாட்கள் மீன்பிடி  தடைக்காலம் புதனன்று தொடங்கியது. குமரி மாவட்டத்தில் கீழமணக்குடி, குளச்சல் முதல் கேரளா, கர்நாடகா, கோவா வரை விசைபடகுகள் கரை ஒதுக்கப்பட்டு வரு கின்றன. குளச்சலில் விசைப்படகுகள் கரை  ஒதுக்கும் பணிகளில் மீனவர்கள் ஈடு பட்டுள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு ஆழ்  கடல் பகுதிகளில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்கா லம் முடிவடைந்து கடந்த ஒன்றாம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை மீன வர்கள் மீண்டும் மீன்பிடி தொழிலை தொடங்கி உள்ளனர். அதே வேளையில் தமி ழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் முடிந்ததும் மேற்கு கடல்  பகுதிகளான அரபிக்கடல் பகுதிகளில் தடை காலம் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம், குளச்சல் முதல் கேரளா  உட்பட குஜராத், கோவா வரை வியாழ னன்று முதல் மீன்பிடி தடை காலம் தொடங்க  இருந்த நிலையில், புதனன்று விடுமுறை நாள்  என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதிகளில் தடைக்காலம் இன்றே தொடங்கியது. இதனால் முட்டம்,  குளச்சல், முதல் நீரோடி வரை உள்ள 20-க்கும் மேற்பட்ட கடற்கரை கிரா மங்களில் விசைபடகுகளை கரை ஒதுக்கு வது, வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகர ணங்களை பாதுகாப்பாக எடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். குமரி மாவட்டத்தில் 5 ஆயிரம் விசைப்படகுகள் கரை ஒதுக்கப்பட்டு உள்ள தாக மீனவ அமைப்புகள் தகவல் கூறு கின்றன.