நாகர்கோவில், ஜூன்.29- பொதுமக்களிடமும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் மலைவிளை பாசியிடமும் வரம்பு மீறி தவறாக நடந்து கொண்ட வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனில் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பில் திங்களன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தக்கலை, திங்கள் நகர், தாழாக்குடி, ஆரல்வாய்மொழி உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, நிர்வாகி குமரேசன், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செய லாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாழாக்குடி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஐயப்பன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் மிக்கேல், பேதுரு, சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். திங்கள்நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிவானந்தம் தலைமை வகித்தார். இதில், டி.ஜெ.புஸ்பதாஸ், ஸ்ரீகுமார், தாமோதரன், லாசர், ஏசுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பேபி தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின், விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் சைமன் சைலஸ், சந்திரகலா, அரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.