tamilnadu

img

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 2.21% அதிகரித்துள்ளது.
மாணவிகள் 95.88%மும், மாணவர்கள் 91.77%மும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 4.14% அதிகரித்துள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் 91.26% மாணவர்கள் தேர்ச்சி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.63% மாணவர்கள் தேர்ச்சி மற்றும் தனியார் பள்ளிகளில் 97.99% மாணவர்கள் தேர்ச்சி பேற்றுள்ளனர். 
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 4,917 ஆகவும், 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,867 ஆக உள்ளது.
தமிழ் பாடத்தில் 98.09% பேரும், ஆங்கிலத்தில் 99.46% பேரும், கணிதத்தில் 96.57% பேரும், அறிவியல் பாடத்தில் 97.90% பேரும், சமூக அறிவியல் 98.49% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 346 பேரும், கணிதத்தில் 1,996 பேரும், அறிவியலில் 10,838 பேரும், சமூக அறிவியலில் 10,256 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில், சிவகங்கையில் அதிகபட்சமாக 98.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகரில் 97.45% தூத்துக்குடியில் 96.76%மும், கன்னியாகுமரியில் 96.66%, திருச்சியில் 96.61% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.