tamilnadu

img

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

தருமபுரி, செப். 28- பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் இறந்தவர்கள் பெயரில் ஆவணம் தயாரித்து பண மோசடி செய்த ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து முக்குளம் பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், முக்கு ளம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், இறந்தவர்களின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ஊராட்சி செய லாளர் சரவணன் பல லட்சம் ரூபாய் மோச டியில் ஈடுபட்டுள்ளார்.

ஆகவே, இவர் மீது  உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இந்த  மோசடிக்கு உறுதுணையாக இருந்த காரி மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர், பணி மேற்பார்வை யாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த ஊராட்சி யில் வீடு கேட்டு விண்ணப்பித்த ஏழை மக்க ளுக்கு வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.