tamilnadu

img

நலவாரிய பணிகளை உடனே துவக்குக! குமரி ஆட்சியரிடம் சிஐடியு மனு

நாகர்கோவில், ஆக.26- நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்தவும், குளறுபடிகளை போக்கவும் கிராம நிர்வாக அலுவலர் சான்றுதர உத்தரவிடவும் வலியுறுத்தி சிஐடியு சார்பில் புதனன்று மனு அளிக்கப் பட்டது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வட நேரேவிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ள தாவது:  மார்ச் 24 ஆம் தேதி கொ ரோனா ஊரடங்கு அறிவிக் கப்படுவதற்கு முன்பாகவே தொழிலாளர் நல அலுவல கம் மூடப்பட்டு தற்போது வரை நலவாரிய பணிகள் முடக்கப்பட்டுள்ளது. நல வாரியத்தில் பதிவு புதுப் பித்தல் பணபயன்களுக்கான விண்ணப்பங்கள் பெறுதல் இரண்டாம்படி அட்டை வழங்குதல் உள்ளிட்ட வழக்கமான பணிகளை உரிய பாதுகாப்புடன் உடனே துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆட்சியர் நிறைவேற்றி தர வலியுறுத்தி செப்டம்பர் 1 ஆம் தேதி நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் நலவாரிய அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இவ்வாறு கூறப் பட்டுள்ளது.  இந்த மனுவை சிஐடியு மாவட்ட செயலாளர் கே. தங்கமோகன், மாவட்ட நிர்வா கிகள் கே.பி.பெருமாள், எஸ்.அந்தோணி, சித்ரா, ஸ்டீபன் ஜெயக்குமார், மாணிக்கவாசகம் உள்ளிட்டோர்  ஆட்சியரிடம் அளித்தனர்.