நாகர்கோவில், ஜூலை 9- குமரி மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ரத்த தானம் செய்வதில் முன்னணி அமைப்பாக திகழ்வதுடன், பல ஆண்டுகளாக ரத்த தான தினத்தன்று சிறந்த ரத்த தான கொடையாளருக்கான விருதையும் பெற்று வருகிறது. கோவிட் 19 ஊரடங்கு காலத்திலும் தன்னலமின்றி வாலிபர் சங்கத்தினர் இரத்தம் தேவைப் படுவோருக்கு உடனடியாக ரத்த தானம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ரத்த கொடையாளர்களை மேலும் இணைக்கும் வகையில் குமரி மாவட்ட இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் ரத்த தான கழகம் சார்பில் ஆன்லைன் பதிவேடு வெளியிடப்பட்டது. இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் என். ரெஜீஷ்குமார் வெளியிட்டார். இதில் மாவட்ட குழு உறுப்பி னர் அனிஸ், அருமனை வட்டார தலைவர் சரவணன், நல்லூர் வட்டார செயலாளர் விபின், நிர்வாகிகள் ஜோதிஸ், மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.