நாகர்கோவில், ஜூலை 9- இரவிபுதூர்கடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அனைவருக்கும் கடன் வழங் கவும், நிர்வாக குழுவை கலைத்து தேர்தல் நடத்தவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரேவிடம் அளித்த மனுவில் கூறப்பட் டுள்ளதாவது: இரவிப்புதூர் கடை தொடக்க வேளாண் மை கூட்டுறவு கடன் சங்கம் வாழ்வச்சகோஷ்டம் பேரூரா ட்சி, திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் மற்றும் செறு கோல் ஊராட்சியின் ஒரு பகுதியும் சேர்த்து செயல் பட்டு வருகின்றது. கடன் சங்கத்தில் தேர்வு செய்யப் பட்ட நிர்வாக குழுவின் கோஷ்டி சண்டையால் நிர்வா கம் ஓராண்டு காலமாக செயல்படாமல் ஸ்தம்பித் துள்ளது. இதனால் விவசாயி கள் வாங்கிய கடனை அடை த்து புதிய கடன் கேட்டும் வழங்காமலும் கடன் அடைப் பதற்கு தங்கள் நகையை ஈடாக வைத்து கடன் அடைத் துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் , மத்திய காலகடன் மற்றும் சுய உதவி குழுக்களு க்கான கடன் எதுவும் வழங்கப் படவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடன் சங்கத்தை நம்பி தான் சுற்று வட்டார மக்கள் உள்ள னர். இதிலிருந்து கடன் பெற்று விவசாய தொழில்கள் செய்து வாழ்ந்து வருகின்ற னர். எனவே உடனடியாக கடன் வழங்கவும், செயல் படாமல் ஸ்தம்பித்து காணப் படும் நிர்வாக குழுவை கலைத்து விசாரணை மேற் கொண்டு புதிய நிர்வாகக் குழுவை தேர்வு செய்தும், கடன் சங்கத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது. இந்த மனுவை தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர். ரவி, மாவட்ட துணைத்தலை வர் என்.முருகேசன் உள்ளிட் டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.