districts

மாமூல் தர மறுத்த மருந்து கடைக்காரர் ரவுடிகள் தாக்கியதில் உயிரிழப்பு நடவடிக்கை கோரி மருத்துவமனை முன்பு மறியல்

பெரம்பலூர், மே 4 - பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாறப்பன் மகன் நாகராஜன் (44). லாடபுரத்தில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். மே 3 அன்று இரவு வழக்கம் போல் கடை மூடும் நேரத்தில், அதே ஊரில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்த எழுத்தாணி (எ) பிரபாகரன் (29), ரகு  (எ) ரகுநாத் (23) ஆகிய இருவரும், மெடிக்கல்  நடத்தி வந்த நாகராஜை அடிக்கடி மிரட்டி பணம் பெற்றுள்ளனர். அதேபோல் மே 3 அன்று இரவும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் தர மறுத்த நாகராஜன், இதுகுறித்து அவர்களின் பெற் றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் நாகராஜன் வீட்டிற்கு மருந்து வேண்டும் என இரவு 11  மணியளவில் அழைத்து சென்று, ஊராட்சி  அலுவலகத்தின் பின்புறம் வைத்து சரமாரி யாக ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். வீட்டிற்கு வந்த நாகராஜனுக்கு மூக்கில்  ரத்தம் வடிந்த நிலையில், அங்கிருந்த வர்கள் அவரை பெரம்பலூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோ தனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்  இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  அடிக்கடி மாமூல் பெற்ற ரவுடிகள் இருவர் மீதும் போலீசில் புகார் கொடுத்தால், சாதி பெயரை சொல்லி திட்டியதாக, பொய்  புகார் கொடுத்து சிறையில் தள்ளிவிடு வோம், ஜாமீன் கிடைக்காது, அப்புறம் கடையை திறக்க முடியாது என உயிரிழந்த நாகராஜின் நண்பர்களை அந்த ரவுடிகள் மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாக ராஜனின் உடலை கூராய்விற்காக பெரம்ப லூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ள னர். மேலும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு புதன்கிழமை காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலை செய்த ரவுடி கள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி  வருகின்றனர்.