tamilnadu

img

வெட்டுக்கிளிகளை அழிக்க பூச்சிமருந்து வேளாண்துறையே தெளிக்க வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜூன் 2- கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக வெட்டுக்கிளியால் பாதிக்கப்பட்ட இடங்க ளில் வேளாண் துறை மூலம் மருந்துகள் அடித்து விவசாயத்தை பாதுகாக்க தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதா வது: கன்னியாகுமரி மாவட்டத்தில் காட் டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட முளவிளை பகுதிகளில் தமிழக வெட்டுக்கிளி பூச்சி வாழை, ரப்பர், அன்னாசி, தேக்கு மற்றும் அனைத்துவிதமான செடி கொடிகள் மற்றும் தாவரங்களின் இலைகளை தின்று நாசம் செய்து வருகின்றன. இதன் விளை வாக விவசாயிகள் பெரும் இழப்பை சந் தித்து வருகின்றனர். தகவலறிந்து திருவட்டார் ஒன்றிய விவ சாய துறை அதிகாரிகள் வந்து இடத்தை பார்வையிட்டு பூச்சிக்கொல்லி மருந்தின் பெயரை எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

ஏற்கனவே ஊரடங்கால் விவ சாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் பயிர்களை தாக்கும் புதுவித மான பூச்சிகளை அழிக்கும் பொறுப்பை யும் அவர்களிடம் கொடுத்து சென்றுள்ளனர். இந்த பூச்சிகள் அனைத்து இடங்களிலும் பரவும் வாய்புள்ளதால் பூச்சி தாக்கு தலுக்குள்ளான அனைத்து பகுதிகளிலும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தால் தான் அவற்றை முழுவதுமாக அழிக்க முடியும். மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பரவாமல் தடுக்க முடியும். எனவே விவசாயத் துறை மூலமாக பூச்சிகளை கொன்று பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெ.சைமன் சைலஸ், மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, மாவட்ட துணைத்தலைவர் என்.முருகேசன், முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின் உள் ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த னர்.